Never Split the Difference: Negotiating as If Your Life Depended on It (Tamil)(Paperback, Chris Voss, Tahl Raz (Author) Nandini (Translator))
Quick Overview
Product Price Comparison
முதலில் ஒரு காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய கிறிஸ் வாஸ், பின்னர் எஃப்பிஐயில் சேர்ந்தார். அங்கு அவர், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவர், வங்கிக் கொள்ளையர், தீவிரவாதிகள், பிணைக்கைதிகளைப் பிடித்து வைத்திருப்பவர்கள் போன்றோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இந்நூலில், அவர் தன் தொழில்வாழ்க்கையில் எதிர்கொண்ட சுவாரசியமான பல பேச்சுவார்த்தைகளைச் சுவைபட எடுத்துரைக்கிறார். அவற்றில் அவருக்கு வெற்றிகரமாகக் கைகொடுத்து உதவிய ஒன்பது கொள்கைகளை அவர் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். அப்பாவி மக்களுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த சமயங்களில் அவர் இவற்றைப் பிரயோகித்து வெற்றி கண்டிருந்தார். இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் எதிர்கொள்கின்ற எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் உங்களுடைய கை மேலோங்கி இருக்கும் என்பது உறுதி.