சட்டப் பொருள் விளக்கம் (Interpretation Of Statutes)(Paperback, Tamil, Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt.) | Zipri.in
சட்டப் பொருள் விளக்கம் (Interpretation Of Statutes)(Paperback, Tamil, Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt.)

சட்டப் பொருள் விளக்கம் (Interpretation Of Statutes)(Paperback, Tamil, Dr. P.R.Jayarajan M.L. M.B.A. P.G.D.A.D.R. D.Litt.)

Quick Overview

Rs.430 on FlipkartBuy
Product Price Comparison
மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த நிலை மாறி தங்களை நெறிப்படுத்திக் கொள்ள சில விதிகளை வகுத்துக் கொண்டான். நாகரிகம் வளர்ச்சியடைய ஆரம்பித்த பின்னர், அரசியலமைப்பின் தேவை எழுந்தது. அது முறையாக சட்டங்களை இயற்றுவதற்கு சட்டமியற்று மன்றத்திற்கு (நாடாளுமன்றம்) அதிகாரம் வழங்கியது. இதனால் மக்களின் வாழ்வை ஒழுங்குறுத்த பல சட்டங்கள் தொடர்ந்து இயற்றப்பட்டன. இந்நிலையில்தான் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு பொருள் விளக்கம் அளிக்கப்பட வேண்டிய அவசியமும், தேவையும் எழுந்தது. இவ்வாறு சட்டங்கள் இயற்றப்படுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அதன் ஆட்சிக்கு உட்பட்ட வழக்குகளில் சில தனிப்பட்ட அம்சங்களுக்கு தீர்வு காண அச்சட்டத்தில் வழிவகைகள் வெளிப்படையாக இல்லாமல் போனது. ஆகவே இயற்றப்பட்ட சட்டத்திற்கு பொருள் விளக்கம் கண்டு, அதில் பொதிந்திருக்கும் உண்மை நோக்கத்தினை அறிந்து, சம்பந்தப்பட்ட வழக்கிற்கு தீர்வு காண வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் தனிப்பட்ட சில வழக்குகள், அந்தச் சட்டத்தின் ஆளுகைக்கு உட்பட்டு வருபவையா என்ற அய்யங்கள் எழுப்பப்படும் பொழுது நீதிமன்றங்கள் சட்டங்களுக்கு விளக்கம் காண முற்பட வேண்டியிருந்தது. இதற்கு சட்டப் பொருள் விளக்க விதிகள், கோட்பாடுகள் உதவிக்கு வருகின்றன. இவை ஒரு சட்டத்திற்கு அல்லது அதன் ஒரு வகைமுறைக்கு, இவ்வளவு ஏன் அதன் ஒரு பதத்திற்கு எவ்வாறு பொருள் விளக்கம் தருவது என்பதற்குண்டான வழிமுறைகளை கூறுகின்றது. இந்த அரிய நூல் அத்தகு சட்டப் பொருள் விளக்க விதிகளை மிக விரிவாக விவரிக்கின்றது. திரு பி.ஆர்.ஜெ. அவர்கள், கடினமான இந்த சட்ட பாடப் பகுதியை தனக்கே உரித்தான பாணியில் வழக்கம் போல் எளிமையாக விவரித்திருக்கின்றார்.